மயிலாடுதுறையில் புகழ்பெற்ற வதான்யேஸ்வரர் ஆலயத்தில் (குரு பரிகார தலம்)இங்கு ரிஷப தேவரின் கர்வத்தை இறைவன் அடக்கியதாக புராண வரலாறு கூறுகிறது.
இவ்வாலயத்தில் கார்த்திகை மாத கடைசி வியாழக் கிழமையை முன்னிட்டு நேற்று இரவு மேதா தட்சிணாமூர்த்திக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு அருள் பாலித்தார். அதைத்தொடர்ந்து வதான்யேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு தங்க கவசத்தால் அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனை சோடச தீபாராதனை மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.