திருச்சி துறையூர் கோட்டத்துார் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த வசந்தகுமாரி(65) என்பவரது வீட்டில், அவரது பேத்தி வினித்ராவும் அவரது தோழிகள் ஷாலினி(23), நிவேதா(23), தாரா(23) ஆகியோர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வந்த பின்னர் அங்கு தங்கி உள்ளனர். அடுத்த நாள் தனது கைப்பையில் வைத்திருந்த 4 சவரன் தங்க வளையல்களை காணாமல் போனது கண்டு பாட்டி வசந்த குமார் அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த தங்க நகைகளை பேத்தியின் தோழிகள் தான் எடுத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் துறையூர் கோர்ட்டில் மனு செய்து, அனுமதி பெற்றதன் அடிப்படையில் துறையூர் போலீசார் 3 பெண்கள் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.