தஞ்சாவூர் அருகே விளார் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரேமலதா ( 45 ),. இவரது கணவர் பார்த்தசாரதி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு தனது மகள் துர்கா உடன் வீட்டின் முன்பக்கம் உள்ள வராண்டாவில் பிரேமலதா தூங்கிக் கொண்டு இருந்தார்.
அப்போது விடியற்காலை மூன்று மணிக்கு, இரண்டு மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு வீட்டின் உள்ளே இருந்த பீரோவில் இருந்த ஐந்து பவுன் நகையை திருடி உள்ளனர். மேலும் வரண்டாவில் தூங்கிக் கொண்டிருந்த துர்காவின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் செயினையும் பறித்துள்ளனர்.
அப்போது தூக்கத்திலிருந்து எழுந்த துர்கா திருடர்களை கண்டு அலறி சத்தம் போட்டு உள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த மர்ம நபர்கள் இரண்டு பேரும் வீட்டின் பின் புறம் வழியாக தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். தகவல் அறிந்த தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.