தேனியில் உள்ள தனியார் திரையரங்கில் விஜய் நடித்த கோட் திரைப்படத்தை மறைந்த விஜயகாந்த் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் சரத்குமார் ஆகியோர் இணைந்து பார்த்தனர்
அப்பா வந்த காட்சியில் ஒவ்வொரு நொடியும் அவரது முடியிலிருந்து வாயிலிருந்து அப்பாவை பார்த்துக் கொண்டே இருந்தேன், மகிழ்ச்சியாக இருந்தது என விஜய் பிரபாகரன் பேட்டி
நடிகர் விஜய் நடித்து வெங்கட் பிரபு இயக்கத்தில் முன்னணி நடிகர்கள் நடிப்பில் கோட் திரைப்படம் கடந்த ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியானது இந்தத் திரைப்படத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரையில் கொண்டு வந்துள்ளனர் இதற்காக படம் வெளியிடுவதற்கு முன்பு விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா மற்றும் அவரது மகன்களை அவர்களது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றார் நடிகர் விஜய். இந்த நிலையில் தேனியில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன், சரத்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தேனியில் உள்ள வெற்றி திரையரங்கில் கோட் திரைப்படத்தை விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன், சரத்குமார் மற்றும் படக்குழுவினர் ஆகியோர் சென்று பார்த்தனர்.
முன்னதாக திரையரங்கிற்கு வருகை தந்த விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன், சரத்குமாருக்கு தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தாவெக நிர்வாகிகள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் விஜய பிரபாகரன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த போது….
ஏ.ஐ தொழில்நுட்பத்தில் அப்பா வந்த காட்சியில் ஒவ்வொரு நொடியும் அவரது முடியிலிருந்து வாயிலிருந்து அப்பாவை பார்த்துக் கொண்டே இருந்தேன் மகிழ்ச்சியாக இருந்தது. விஜயகாந்த் வந்த காட்சியை வெங்கட் பிரபு சிறப்பாக இயக்கியுள்ளார் விஜயும் நன்றாக நடித்துள்ளார். விஜயகாந்தை ஏ.ஐ தொழில்நுட்ப மூலம் படத்தில் பயன்படுத்தும்போது எங்களிடம் அனுமதி பெற்று பின் பயன்படுத்த வேண்டும். விஜயகாந்திற்கும், விஜய்க்கும் செந்தூரப் பாண்டியன் படத்திலிருந்து பாசமும் பந்தமும் தொடர்ந்து வந்து உள்ளது இது ஒரு குடும்பப் படமாக நாங்கள் பார்க்கிறோம் என தெரிவித்தார்..