மதுரையை சேர்ந்த ஒரு தம்பதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வழியாக திருச்சிக்கு விமானத்தில் வந்தனர். அவர்கள் கோலாலம்பூரில் இருந்து 35 பெட்டிகளை கார்கோ விமானம் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெட்டிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பெட்டிகளுக்குள் தோல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
அது எந்த மிருகத்தின் தோல் என்பது சுங்க அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. எனவே வனத்துறை அதிகாரிகளை வரவழைத்து அவற்றை ஆய்வு செய்தனர். அப்போது அது ஆட்டுத்தோல் என்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அந்த தம்பதிகளை அழைத்து ஏன் இத்தனை பெட்டி ஆட்டுத்தோல்கள் கொண்டு வந்தீர்கள் என விசாரித்தனர்.
அந்த ஆட்டுத்தோலில் தங்கள் மத வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதாகவும், அதை வீடுகளில் மாட்டுவது வழக்கம். எனவே அதை வாங்கி வந்தோம் என தெரிவித்தனர். ஆனாலும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. அவர்கள் கொண்டு வந்தது ஆட்டுத்தோல் தான் அல்லது வேறு மிருகங்களின் தோல் கொண்டு வரப்பட்டதா என விசாரணை நடந்து வருகிறது.