தேனி அருகே சங்க கோணாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இறுதி சடங்கு செய்வதற்கு மூல வைகை ஆற்றில் இறங்கி பிரேதத்தை சுமந்து சென்று மறுக்கரையில் இறுதி சடங்கு செய்யும் பரிதாப நிலை தொடர்ந்து வருகிறது.
தேனி அருகே தேனி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாகலாபுரம் ஊராட்சியில் சங்ககோணாம்பட்டி உட்கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 150 வீடுகள் உள்ளன இக்கிராமத்தில் குடியிருப்போரில் பெரும்பாலானவர்கள் விவசாயம் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களாகவும், வாகன ஓட்டுனர்களாகவும், கூலி தொழிலாளர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் யாரேனும் உயிரிழக்க நேரிடும் போது அவர்களின் பிரேதத்தை இறுதி சடங்கு செய்வதற்கு என கிராமத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் மூல வைகை ஆற்றின் கரையில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் காத்திருப்போர் அறையுடன் கூடிய மயானம் மற்றும் இறுதி சடங்குகள் மேற்கொள்ள ஆழ்துளை கிணறு வசதி அமைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் கிராம மக்கள் தங்கள் பகுதியில் மரணிப்பவரை புதைப்பதற்கோ அல்லது எரியுட்டுவதற்கோ இந்த மயானத்தை பயன்படுத்துவதில்லை. பிரேதத்தை கிராம மக்கள் இம்மயானத்தை தாண்டி மூல வைகை ஆற்றை கடந்து மறு கரையில் உள்ள பகுதியில் பிரேதத்தை புதைக்கவும் மற்றும் எரியூட்டமும் செய்து வருகின்றனர்.மூல வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடாத போது பிரதங்களை கொண்டு செல்வதில் சிரமங்கள் இருப்பதில்லை.