இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 169 ஆவது படமாகும். இதனை தொடர்ந்து ரஜினியின் 170வது படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கவுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. லைகா நிறுவனம் இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சூர்யாவின் ”ஜெய் பீம்” படத்தை இயக்கியவர் ஞானவேல் என்பது குறிப்பிடதக்கது.
இன்று சுபாஸ்கரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, லைகா புரொடக்ஷன்ஸ் பேனரில் “சூப்பர் ஸ்டார்” ரஜினிகாந்தின் “#தலைவர் 170” திரைப்படத்தை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்க, “ராக்ஸ்டார்” அனிருத் இசையமைக்க, சுபாஸ்கரன் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஜிகேஎம் தமிழ் குமரன் தலைமையில் துவங்கி 2024ல் ரிலீசுக்கு தயாராகும்.
பல வெற்றிகரமான திட்டங்களுக்குப் பிறகு மீண்டும் “தலைவர்” ரஜினிகாந்துடன் இணைந்திருப்பதில் லைகா குழுமம் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகள் மற்றும் வாழ்த்துக்களுடன், இந்தத் திரைப்படம் அனைத்து ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரக்கூடிய அனைத்து உச்சங்களையும் அடையும் என்று நாங்கள் மனதார நம்புகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.