திருச்சி, தஞ்சை, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, உள்பட டெல்டா மண்டலங்களுக்கு உட்பட்ட 19 மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருச்சி சத்திரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடந்தது .
கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இதில் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கி பேசினார்.
மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ் மூப்பனார், தர்மராஜ், திருச்சி மாவட்ட தலைவர்கள் இன்டர்நெட் ரவி, குணா, கே.வி.ஜி. ரவீந்திரன், சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாநில செயலாளர்கள் ராஜு, மதிவாணன், மாநில சிறப்பு அழைப்பாளர் அன்னபூரணி, விவசாய பிரிவு மாவட்ட தலைவர் புங்கனூர் செல்வம், மாவட்ட செயலாளர் சரவணன், மாநில மாணவர் அணி செயலாளர் லோகேஷ். மாநில இளைஞரணி செயலாளர் சிவகணேசன் மற்றும் 19 மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்றத்தில்
த.மா.காவின் குரல் பலமாக ஒலிக்கும் நோக்கில் 2025ம் ஆண்டில் கட்சியின் தொடர் களப்பணிகளின் ஒரு பகுதியாக இன்று உறுப்பினர் அட்டை வழங்குவதன் மூலமாக தொடங்கி வைத்துள்ளோம். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில்
திமுக கூட்டணி கட்சிகள் வாய் மூடி மௌனமாக இருப்பது வெட்கக்கேடானது.
பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.
2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணியில் ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. “ஒத்த கருத்து” என்பது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது தான்.
கைது நடவடிக்கைகளால் எதிர்க்கட்சிகள் குரலை ஒருபோதும் முடக்கிவிட முடியாது, அண்ணா பல்கலை கழக மாணவி விவகாரத்தை அரசுக்கு நினைவுபடுத்த வேண்டியது எதிர்கட்சிகளின் கடமை. அரசு உண்மை நிலையை வெளிக்கொண்டுவர வேண்டும். குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.
புயல், கன மழையால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு இழப்பீட்டை இன்னும் வழங்கவில்லை.
ஏக்கர் ஒன்றுக்கு நெற்பயிருக்கு 35,000 ரூபாய், தோட்டப்பயிர்களுக்கு 25,000 ரூபாய் வழங்க வேண்டும்.
பயிர்க்காப்பீட்டுக்கு அரசு வழங்கும் மானியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
பொங்கல் பரிசு தொகுப்பில் அனைவருக்கும், 3,000 ரூபாய் வழங்க வேண்டும்- இவ்வாறு அவர் கூறினார்.