கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், அதே பள்ளியில் 10 வகுப்பு மாணவியுடன் பழகி வந்தான். சில தினங்களுக்கு முன் அந்த மாணவன், மாணவியை தனது வீட்டு அருகே வரும்படியும், ஒரு பரிசு வைத்திருப்பதாகவும், போனில் அழைத்து உள்ளான். அந்த மாணவியும் வந்து இருக்கிறாள். அப்போது அங்கு மாணவனும், அவனது கூட்டாளிகளும் நின்றிருக்கிறார்கள். இதைப்பார்த்து மாணவி அதிர்ச்சி அடைந்திருக்கிறாள்.
ஆனால் 12ம் வகுப்பு மாணவனும், அவனது கூட்டாளிகளும் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். இதனால் அந்த மாணவி கூச்சல் போட்டார். ஆத்திரமடைந்த மாணவர்கள், மாணவியின் கழுத்தில் கத்தியால் அறுத்து விட்டு ஓடிவிட்டனர்.
படுகாயமடைந்த மாணவி திண்டுக்கல்லில் ஒரு தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக 12ம் வகுப்பு மாணவனை பிடித்து போலீசார் விசாரணை. அவனது கூடடாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.