பெண்கள் பல முறை தோற்றாலும் தன்னம்பிக்கையுடன் உழைத்தால் மட்டுமே முதலிடத்தை பிடித்து வெற்றி பெற முடியும் – கல்லூரி மகளிர் தின விழாவில் விழாவில் 2021 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா டைட்டில் சாம்பியன் மற்றும் பேஷன் மாடல் ஜெனிஷா சரோன் ஷா பேச்சு….
உலக மகளிர் தினமான இன்று திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே தனியார் (SRM) கல்லூரியில் பெண்களை போற்றும் விதமாக அக்னி சிறகு என்ற தலைப்பில் மகளிர் தினம் கல்லூரியின் குழும தலைவர் டாக்டர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக 2021 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா டைட்டில் சாம்பியன் மற்றும் பேஷன் மாடல் ஜெனிஷா சரோன் ஷா, வில்வித்தை சாம்பியன் செல்வி சுபஸ்ரீ திருச்சி மாவட்ட அனைத்து பெண்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சமூக சேவகர் ஜாம்ப கா ராமகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
2021 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா டைட்டில் சாம்பியன் மற்றும் பேஷன் மாடல் ஜெனிஷா சரோன் ஷா பேசும்போது….
பெண்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை இழந்து விடக்கூடாது. இரண்டு முறை மூன்று முறை தோற்று விட்டாலும் தன்னம்பிக்கையுடன் உழைத்தால் மட்டுமே முதலிடத்தை பெற்று வெற்றி பெற முடியும். இக்காலகட்டத்தில் அனைத்து துறைகளிலும் பெண்கள் முக்கிய பங்கு வைத்து வருகின்றனர். பெண்கள் அடிமையில்
இருந்து விலகி ஆணுக்கு நிகராக பெண்களும் இருப்பதால் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும், பெண்கள் நல்ல வழியில் முன்னேற அயராது பாடுபட்டு உழைக்க வேண்டும் என பேசினார். இந்நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், நர்சிங் உள்ளிட்ட கல்லூரியின் முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.