திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள எல். என். பி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் நடைப்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ந்தேதி உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது . அதன் ஒரு பகுதியாக குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சில்ட்ரன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து லால்குடி எல்.என்.பி.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின பேரணி கையெழுத்து இயக்கம் துண்டு பிரசுர விநியோகம் மற்றும் கருத்தரங்கம் பள்ளியின் தலைமை ஆசிரியர் நளினா தலைமையில் இன்று நடைபெற்றது. குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணியை பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
குத்தாலிங்கம் துவக்கியும் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதும் அமர்த்துவதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பது குறித்த கையெழுத்து இயக்கத்தை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ராகுல் காந்தி துவக்கி வைத்தார்கள்.
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்து மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு சிறப்புரை ஆற்றினார். தொழிலாளர் துணை ஆய்வாளர் ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் ராபின்சன் திவாகரன் வரவேற்றார் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு பாதுகாப்பு அலுவலர் முத்து மாணிக்கம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பேரணியானது பள்ளியிலிருந்து பேருந்து நிலையம் வழியாக ரவுண்டானா மற்றும் கடைவீதி பகுதிகளில் குழந்தை தொழிலாளர் முறை குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை வைத்துக்கொண்டு கோஷங்களை மாணவர்கள் எழுப்பினார்கள். கையெழுத்து இயக்க பதகையில் மாணவிகள் தங்களது கையெழுத்துகள் மூலம் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தெரிவித்தார்கள். பொதுமக்கள் மத்தியில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.