அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நாயகனைபிரியாள் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (21). கூலி தொழிலாளியான இவரது குடும்பத்திற்கும் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியின் குடும்பத்தாருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இதனால் சிறுமி பள்ளிக்கு சென்று வரும் பொதெல்லாம் சக்திவேல் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். கடந்த 19ஆம் தேதி சிறுமியும் அவரது தாயாரும் வீட்டில் தனியாக இருந்த போது இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி சிறுமியை பழவந்தமாக இழுத்துள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் சிறுமியையும் அவரது தாயாரையும் காப்பாற்றினர். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தாயார் 1098 நம்பருக்கு தகவல் தெரிவித்தார். இதனையத்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் மகளிர் போலீசார் சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் சக்திவேலை போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.