அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், தண்டலை மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவருடைய மகன் ஞானசேகரன்,(35/24) என்பவர் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் ஈடுபட்டு அவர் மீது ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 02.02.2024-ந் தேதி அவர் ஒரு பெண்ணை பின்தொடர்ந்து, வழிமறித்து, திட்டி, மிரட்டியதாக அவர் மீது ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டு ஜெயங்கொண்டம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் ஞானசேகரன்மீது குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கக்கோரி, ஜெயங்கொண்டம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ந.ராமராஜன் கோரியதன் அடிப்படையில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ்ன் மேல் பரிந்துரையை ஏற்று, அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா ஞானசேகரன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி தடுப்புக்காவலில் அடைக்க ஆணை பிறப்பித்து, அதன் அடிப்படையில்ஞானசேகரன் “குண்டர்” என குண்டர் தடுப்பு சட்டத்தின் படி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.