Skip to content
Home » பெண்கள் பிரீமியர் லீக்….. பிசிசிஐ லோகோ வௌியீடு…..

பெண்கள் பிரீமியர் லீக்….. பிசிசிஐ லோகோ வௌியீடு…..

  • by Senthil

ஐ.பி.எல் போன்று பெண்கள் ஐ.பி.எல் எனப்படும் முதலாவது பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை மும்பையில் நடக்கிறது. இதையொட்டி ஆமதாபாத், பெங்களூரு, டெல்லி, லக்னோ, மும்பை ஆகிய 5 நகரங்களை அடிப்படையாக கொண்டு அணிகள் உருவாக்கப்பட்டு விற்கப்பட்டு உள்ளன. 5 அணிகளுக்கும் சேர்த்து 30 வெளிநாட்டவர் உள்பட 90 வீராங்கனைகள் தேவைப்படுகிறார்கள். இவர்கள் ஏலம் மூலம் அணிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளனர். இதன்படி பெண்கள் பிரிமீயர் லீக் போட்டிக்கான வீராங்கனைகள் ஏலம் மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ சர்வதேச கூட்டரங்கில் இன்று நடைபெற்று வருகிறது. ஏலப்பட்டியலில் 15 நாடுகளை சேர்ந்த மொத்தம் 448 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். 269 பேர் இந்தியர். 179 வீராங்கனைகள் வெளிநாட்டவர். இவர்களில் 202 வீராங்கனைகள் சர்வதேச அனுபவம் பெற்றவர்கள். இந்த நிலையில், பெண்கள் பிரீமியர் லீக் தொடருக்கான அதிகாரப்பூர்வ லோகோ (Logo) இன்று வெளியிடப்பட்டது. ஏல நிகழ்ச்சியின்போது, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா, ஐபிஎல் தலைவர் அருண் துமால் ஆகியோர் லோகோவை வெளியிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!