ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்……… திமுகவின் அடித்தளமே ஈரோடுதான்; கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் குருகுலமாக இருந்தது ஈரோடு. சம்பத் நகரில், ஈ.வி.கே.எஸ். சம்பத் மகனுக்கு வாக்கு சேகரித்து கலைஞர் மகன் வந்துள்ளேன். விரைவில் குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என்பது இந்தியாவில் எங்கும் இல்லை என்றும், தமிழ்நாட்டில் தான் செயல்படுத்தி வருகிறோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.