பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வேப்பந்தட்டை கிராமத்தை சேர்ந்த பெண் ஆசிரியை தீபா என்பவரை காணவில்லை என்று அவரது கணவர் பாலமுருகன் என்பவர் கடந்த 15.11.2023–ம் தேதி வ.களத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து அவரை வ.களத்தூர் காவல்துறையினர் தேடி வந்தனர். அவர் பணிபுரிந்த வண்ணாரம்பூண்டி அரசு மேல்நிலை பள்ளியில் விசாரணை செய்த போது அவருடன் பணிபுரிந்த குரும்பலூர் கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகன் வெங்கடேசன் (37) என்ற ஆசிரியருடன் காணாமல் போன அன்று சென்றதாக தெரிய வந்தது. அதன்பேரில் விசாரணையை முடுக்கி விட்ட காவல்துறையினர் தலைமைறைவாக இருந்த ஆசரியர் வெங்கடேசனை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷ்யாம்ளா தேவி உத்தரவின்பேரில் மங்களமேடு உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் தெ.சீராளன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தேடிவந்தனர். இந்நிலையில் தனிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி ஆசிரியர் வெங்கடேசன் சென்னையில் இருப்பது தெரியவந்தது.
தகவல் கிடைக்கப்பெற்ற உடனே விரைந்து சென்ற தனிப்படையினர் ஆசிரியர் வெங்கடேசனை சென்னையில் வைத்து கைது செய்து பெரம்பலூர் மாவட்டம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. ஆசிரியர் வெங்கடேசன் ஆசிரியை தீபாவை நயமாக பேசி ஏமாற்றி தீபாவின் காருடன் பெரம்பலூர் மாவட்டம் முருக்கன்குடி மற்றும் நமையூர் வனப்பகுதியில் வைத்து சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டு தீபாவின் உடலை தீபாவின் காரிலேயே ஏற்றிச்சென்று புதுக்கோட்டை அருகில் காட்டு பகுதியில் வைத்து பிரேதத்தை முழுவதுமாக எரித்துவிட்டதாகவும் ஆசிரியர் தீபா அணிந்திருந்த தங்க தாலிச்செயின் மற்றும் அவரது செல்போன் ATM –கார்டு உள்ளிட்ட உடைமைகளையும் தீபாவின் காருடன் எடுத்துச்சென்று மதுரை திண்டுக்கல் தேனி ஆகிய இடங்களில் சுற்றித்திரிந்துவிட்டு இறுதியில் கோயம்பத்தூர் உக்கடம் மார்க்கெட் பகுதியில் தீபாவின் காரை அங்கேயே விட்டுவிட்டு கேரளா மாநிலம் சென்றும் அதன்பின்னர் சென்னை சென்று தலைமறைவாக இருந்து வந்த்தாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருடன் இணைந்து மேற்படி பெண் ஆசிரியையின் உடலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் வழக்கின் கொலையாளி ஆசிரியர் வெங்கடேசன் மீது வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தற்பொழுது வெங்கடேசனை மங்களமேடு போலீசார் கஸ்டடியில் எடுத்துள்ளனர். போலீசார் தீவிர விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.