ரோட்ராக்ட் கிளப் ஆப் கோயம்புத்தூர் மெயின் சார்பாக மாவட்டத்தில் பல்வேறு சேவை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பெண்களின் சுய தொழிலை மேம்படுத்தும் விதமாக மாநகராட்சியுடன் இணைந்து கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பெண்மை எனும் சிறப்பு கண்காட்சி நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை ரோட்ராக்ட் கிளப்பின் மாவட்ட ஆளுநர் வழக்கறிஞர் சுந்தரவடிவேலு துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பிளஸ்சி, இணை ஒருங்கிணைப்பாளர் பிரியதர்ஷினி, செயலாளர் மதன் மற்றும் கிளப் செயலாளர் எப்சிபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த விற்பனை கண்காட்சியில் பெண்களால் தயாரிக்கப்பட்ட
கைவினைப் பொருட்கள்,ஆடைகள், உணவு வகைகள், நகை கண்காட்சி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெற்றிருந்தது.பெண்கள் மட்டும் நடத்திய இந்த கண்காட்சியில் வரக்கூடிய வருமானங்களை 20சதவீதம் ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து சேவைகளை மேற்கொள்ள போவதாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.