தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் வாடகை வீட்டில் ஒரு தம்பதியினர் தங்களின் 15 வயது மகளுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளவர் மணிகண்டன் (38). இவர் அந்த 15 வயது சிறுமிக்கு பலமுறை பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2 நாட்கள் முன்பு மீண்டும் அந்த சிறுமிக்கு மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்த சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்து திருவையாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை செய்தபோது மணிகண்டன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து திருவையாறு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபாமா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பேக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.