கோவை மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் போலீசார் சதீஷ்குமார் என்கிற குஞ்சான் (35) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சதீஷ்குமாருக்கு 30 ஆண்டு சிறைதண்டனை மற்றும் 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார்.
வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய பெண் தலைமை காவலர் கலையரசி ஆகியோர்களை கோவை மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் பாராட்டினார்.