தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே விளாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் எம். ஆனந்தராஜ் (27). இவர் 2019 ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை காதலித்து பாலியல் வல்லுறவு செய்தார். இதுகுறித்து திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து ஆனந்தராஜை கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தரராஜ் விசாரித்து ஆனந்தராஜூக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.