Skip to content
Home » அமைச்சர் மகேசின் டிரைவர் எனக்கூறி மாணவியிடம் அத்துமீறல்….. திருச்சி வாலிபர் போக்சோவில் கைது

அமைச்சர் மகேசின் டிரைவர் எனக்கூறி மாணவியிடம் அத்துமீறல்….. திருச்சி வாலிபர் போக்சோவில் கைது

  • by Senthil

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்திற்குட்பட்ட தாழக்குடி கிராமத்தைச் சேர்ந்த சங்கரி  என்பவரது  மகள்  17 வயது மாணவி,  இவர் ஐடிஐ படித்து வந்தார்.  இந்த மாணவியிடம்  சிறுமருதூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் சிலம்பு என்ற சிலம்பரசன் பழகி வந்தார்.  பின்னர் அவர்களிடையே காதல் ஏற்பட்டது.

சிலம்பரசன் தான் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் கார் டிரைவராக வேலை பார்ப்பதாக  அந்த பகுதியில் கூறி வந்தாராம். இதனால் அவர் அந்த பகுதியில்   அதிகார தோரணையில் செயல்பட்டு வந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் தனது காதலியை பைக்கில் அழைத்துக்கொண்டு  நம்பர் 1 டோல்கேட் மாருதி நகரில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றார். அங்கு ஏற்கனவே 5 பேர் இருந்தனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த மாணவியை கூட்டு பலாத்காரம் செய்து வீடியோவும் எடுத்துக்கொண்டனர்.

பின்னர் அந்த வீடியோவை காட்டி மிரட்டி  அடிக்கடி மாணவியிடம் உறவு கொண்டார். இதில் அவர் கர்ப்பமானார். பின்னர்  மாத்திரை வாங்கி கொடுத்து கர்ப்பத்தை கலைத்து விட்டார். இதனால் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து வீட்டுக்கு இந்த விவகாரம் தெரிந்தது.  மாணவியின் தாயார்  சங்கரி ,சிலம்பரசனை அழைத்து இதுபற்றி விசாரித்துள்ளார். அதற்கு அவர்  என்னை எதுவும் செய்ய முடியாது. நான்   எங்க  வேலை செய்கிறேன் தெரியுமா  என மிரட்டி விட்டு போய்விட்டார்.

இது குறித்து கடந்த வாரம் சங்கரி தனது மகளுடன் திருச்சி எஸ்.பி. ஆபீஸ் வந்து  புகார் கொடுத்தார். அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து  டிரைவர் சிலம்பரசனை போக்சோவில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.  அவரது நண்பர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!