அரியலூர் மாவட்டம் நாயகனைபிரியாள் கிராமத்தைச் சேர்ந்த அருள்தாஸ்(32). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிறுமியை காதலிப்பதாக கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கடந்த 2020 ஆம் ஆண்டு கர்ப்பமடைந்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் அளித்த புகார் அடிப்படையில் அருள்தாஸ் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
நேற்று அரியலூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி செல்வம் குற்றவாளி அருள்தாசுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 20,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குற்றவாளி அருள்தாஸ் சித்தப்பா உறவுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.