திருச்சி, சமயபுரம் அருகேயுள்ள தெற்கு இருங்களூர் ராஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி கலைச்செல்வி. இவர் லால்குடி அருகே உள்ள காணக்கிளியநல்லூர் போலீஸ் ஸ்டேசனில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர்கள் வழக்கம் போல் கணவன் – மனைவி 2 பேரும் காலையில் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். இதனைதொடர்ந்து பாலசுப்ரமணியன் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த பாலசுப்பிரமணியன் பீரோவில் வைத்திருந்த ரூ. 30 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து பாலசுப்ரமணியன் சமயபுரம் போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைத்தனர். இதில் 2பேரின் கைரேகை பதிவாகி உள்ளது. பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் பணம் கொள்ளையான சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் பணம் கொள்ளை… விசாரணை…
- by Authour
