காஞ்சிபுரம், கங்குவார்சத்திரம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பெண்ணின் தலை மீது லாரி டயர் ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பெண் பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.