Skip to content
Home » பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு…. பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் கைது…

பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு…. பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் கைது…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி காவல் நிலையம் அருகே “செயின்ட் மேரிஸ்” என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் பழனிவேல் – சிவசங்கரி தம்பதியின் 4 வயது மகள் லியா லட்சுமி படித்து வந்தார்.

வழக்கம் போல் பள்ளி சென்ற சிறுமி லியா லட்சுமி, மதிய உணவு இடைவேளையின் போது கழிவறை சென்றுள்ளார். கழிவறை சென்று திரும்பிய சிறுமி அங்கிருந்த கழிவுநீர் தொட்டியின் மீது ஏறிய போது இரும்புத் தகடு உடைந்து உள்ளே விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கழிவறை சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் திரும்பாததால் தேடிச் சென்ற ஆசிரியர் கழிவுநீர் தொட்டியில் சிறுமி கிடப்பதை கண்டு அதிர்ந்துள்ளார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டொமில்லா மேரி, ஆசிரியர் ஏஞ்சல் ஆகியோர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.