தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாதுளம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் காவியா ( 5). இவர் நேற்று தனது நண்பர்களுடன் மகாமகம் குளத்திற்கு விளையாட வந்தார். அப்போது எதிர்பாராமல் காவ்யா குளத்திற்குள் தவறு விழுந்து விட்டார். குளத்து தண்ணீரில் காவ்யா தண்ணீரில் தத்தளித்தார். உடன் விளையாட வந்த அந்த சிறுமியின் நண்பர்கள் சாலையில் செல்பவர்களிடம் இதுகுறித்து அழுது கொண்டே தெரிவித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் கும்பகோணம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் நீரில் மூழ்கிய சிறுமியை தேடினர். ஆனால் சிறுமியை உயிருடன் மீட்க முடியவில்லை. குளத்து நீரில் மூழ்கிய சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
இதையடுத்து போலீசார் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.