திருச்சி, மணப்பாறை அருகே தனியார் பஞ்சாலை பஸ் மோதி பெண் பக்தர் உயிரிழந்துள்ளார். கும்பகோணம் துக்காம்பாளையத்தை சேர்ந்த உமாராணி(60) என்பவர் உயிரிழந்துள்ளார். 3 பேர் படுங்காயங்களுடன்
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பழனிக்கு பாதயாத்திரையாக சென்ற போது இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. பஸ்சின் கண்ணாடியை அடித்து சக பக்தர்கள் அடித்து நொறுக்கினார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து இச்சம்பம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.