தஞ்சை அருகே ஆர்சுத்திப்பட்டு வடக்கு தெருவை சேர்ந்த உத்திராபதி என்பவரின் மகன் சிவசுப்ரமணியம் (46). இவரது மனைவி மஞ்சுளாதேவி (37). கடந்த 8ம் தேதி மஞ்சுளா தேவி ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது ஸ்டவில் இருந்த தீ அவரது ஆடையில் பற்றி எரிந்தது. இதில் பலத்த தீக்காயமடைந்த மஞ்சுளாதேவியை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி மஞ்சுளா தேவி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.