பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் சாலையோரத்தில் பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் இறந்த நிலையில் கிடந்தது. இந்த குழந்தை பிறந்து சில மணி நேரங்களே இருக்கும் என தெரிகிறது. தொப்புள் கொடியுடன் அந்த குழந்தை சடலமாக கிடந்தது. இதை வீசி சென்றவர்கள் யார் என தெரியவில்லை. பச்சிளம் குழந்தையின் சடலத்தை பார்த்த கிராம மக்கள் பெரம்பலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பெண் குழந்தை என்பதால் வீசி சென்றார்களா, அல்லது முறை தவறி பிறந்ததால் இப்படி வீசப்பட்டதா, இதன் தாய் யார் என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.