திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவலர்கள் ரோந்து செய்து, முக்கிய இடங்களில் வாகன தணிக்கை செய்தும், இருசக்கர வாகனங்களில் வந்து பெண்களிடம் செயின்பறிப்பு, பொதுமக்களிடம் செல்போன் மற்றும் பணம் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநகர காவல் துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திருச்சி மாநகரில் முழுவதும் ஆய்வாளர்கள் தலைமையில் தீவிர வாகன தணிக்கை செய்து, பெண்களிடம் செயின்பறிப்பு, பொதுமக்களிடம் செல்போன் மற்றும் பணம் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டதின்பேரில், நேற்று திருச்சி மாநகரில் 9 சோதனை சாவடிகள் (Check Post), சிறப்பு உதவி ஆய்வாளர் தலைமையில் 14 ரோந்து வாகனங்கள், 3 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மற்றும் மாநகரத்தின் பிரதான முக்கிய 41 சந்திப்புகளில் 20 ஆய்வாளர்கள் தலைமையில் சுமார் 150 காவல் ஆய்வாளர்களுடன் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாகன தணிக்கையை காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
வாகன தணிக்கையின்போது அதிவேக (High Speed) இருசக்கர வாகனத்தில் வரும் இளைஞர்கள், சந்தேக நபர்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் Triple Ride செய்து வரும் இளைஞர்கள் ஆகியோர்களின் இருசக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி, வாகன பதிவு எண், (Registration Number) காப்பீடு,(Insurance) வாகனங்களின் ஆவணங்களை சரிபார்த்தும், FRS செயலி மூலமாக குற்றவாளிகளின் முக அடையாளங்களை சரிபார்த்தும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
மேலும் மாநகர நவீன காவல்கட்டுபாட்டு அறையில் (Modem Control Room) பணியில் உள்ள காவலர்கள் இதோபோன்று Triple Ride, High Speed இருசக்கர வாகனத்தில் செல்லும் சந்தேக நபர்களின் வாகன நடமாட்டத்தை கட்டுபாட்டு அறையில் உள்ள CCTV உதவியுடன் கண்காணித்தும், சந்தேக நபர்கள் எந்த பகுதியில் செல்கிறார்களோ அந்தந்த பகுதிகளில் வாகன தணிக்கை செய்யும் காவல் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க அறிவுறுத்தினார்.
மேலும் வாகன தணிக்கையின்போது பொதுமக்களிடம் “உங்களுடைய பாதுகாப்பிற்காகத்தான் வாகன தணிக்கை செய்கிறோம். அப்போது தான் குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களை கண்டறியமுடியும்” என்று கனிவுடன் எடுத்துக்கூறுமாறு காவல் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற தொடர்ந்து தீவிர வாகன தணிக்கை செய்து, குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.