கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அங்கன்வாடி ஊழியராக வேலை செய்துவரும் ஜோதி(36) உடன் லாரி டிரைவர் வெங்கடேஷ்(35) கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை ஒசூர் அடுத்த சொன்னேபுரம் என்னுமிடத்தில் டிரைவர் வெங்கடேஷ் ஜோதி இல்லத்துக்கு வந்துள்ளார். அப்போது குடிபோதையில் ஜோதி தன்னுடன் சரியாக பேசுவதில்லை, போன் எடுப்பதில்லை எனக்கூறி தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜோதி தனது அக்கா மகனான ஹரீஷ்குமாரிடம் (22) இது குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து பேரிகை பகுதியில் உள்ள சொன்னேபுரம் கிராமத்திற்கு அருகே சித்தி ஜோதியுடன் வெங்கடேஷ் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்டு ஆத்திரமடைந்த ஹரீஷ்குமார், டிரைவர் வெங்கடேஷ்யை கல்லால் தலை, கால் உள்ளிட்ட பகுதிகளில் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வெங்கடேஷ் ஓசூர் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் வெங்கடேஷ் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததார். இதையடுத்து இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றிய பேரிகை போலீசார், அங்கன்வாடி ஊழியர் ஜோதி மற்றும் ஹரீஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்