Skip to content
Home » வேலைக்கார சிறுமி சித்ரவதை….. திமுக எம்.எல்.ஏ. திடீர் விளக்கம்…

வேலைக்கார சிறுமி சித்ரவதை….. திமுக எம்.எல்.ஏ. திடீர் விளக்கம்…

  • by Authour

சென்னை பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் வீட்டில், வீட்டு வேலை செய்த சிறுமியை கொடுமைபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறுமியை கொடுமைப்படுத்திய எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதற்கிடையே, எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், ஆபாசமாக பேசுதல், மிரட்டுதல், தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ. கருணாநிதி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது: என் மகனுக்கு திருமணமாகி 7 ஆண்டாகிறது. அவர் திருவான்மியூரில் தனியாக வசித்து வருகிறார். இந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அங்கு என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது.  மகன், மருமகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவர்கள் அதை எடுப்பார்கள், இதில் எனது தலையீடு இருக்காது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *