ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் உப பொருட்களான நெய். பால்பவுடர், பனீர், வெண்ணெய், பால்கோவா, தயிர், மோர், லஸ்ஸி, யோகர்ட், நறுமணப் பால் வகைகள். இனிப்புகள், ஐஸ்கிரீம், குல்பி, சாக்லேட் மற்றும்குக்கீஸ் வகைகள் நுகர்வோர்களுக்கு விநியோகம் செய்து வருகின்றது. பால் அம்பத்தூர் பால் உப பொருட்கள் பண்ணையில் நாள் ஒன்றுக்கு 15,000 லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்தித்திறனுடன் சுமார் 84 உபபொருட்கள், 146 வகைகளில் தயாரித்து அனைத்து மாவட்டங்களில் உள்ள நுகர்வோர்களுக்கு விநியோகம் செய்து வருகின்றது. இந்த சூழலில் ஆவின் பொருட்களின் விலைகளை அவ்வப்போது அந்நிறுவனம் ஏற்றி வரும் நிலையில் சமீபத்தில் ஐஸ்கிரீம் , தயிர் ,நெய் , ஆரஞ்சு நிற பால் பாக்கெட் உள்ளிட்டவைகளின் விலையும் உயர்த்தப்பட்டது. ஆவின் பொருட்களின் விலை ஏற்றத்தை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டித்ததுடன் விலை ஏற்றத்தை திருப்ப பெற வேண்டும் என அறிவுறுத்தினர். இந்நிலையில் ஆவின் நெய்யின் விலை 580 ரூபாயிலிருந்து தற்போது 630 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.ஒரு லிட்டர் பிரீமியம் நெய் 630 ரூபாயிலிருந்து 680 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. 5 லிட்டர் நெய் பாட்டில் பாட்டில், 2,900 ரூபாயில் இருந்து, 3,250 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பால் விலையை தொடர்ந்து, நெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது சாமானியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.