Skip to content

‘கெட் அவுட் ரவி’ கோவை, கரூரை கலக்கும் திமுக போஸ்டர்

தமிழக கவர்னர் ரவி நேற்று  கவர்னர் உரையை படிக்காமல்,  சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார். இதையொட்டி  கவர்னருக்கு தமிழ்நாட்டில்  கடும்  எதிர்ப்பு  கிளம்பி உள்ளது.

கவர்னர் ரவியை கண்டித்து சமூக வலைளத்தில்  பொதுமக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்  இன்று  தமிழ்நாடு முழுவதும் கவர்னர் ரவிக்கு எதிராக சுவரொட்டிகள்  ஒட்டப்பட்டு  கண்டன போராட்டங்கள் நடந்து வருகிறது.

இன்று காலை,  கோவை, கரூர்,  திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுகை, நாகை, மதுரை,  உள்பட  அனைத்து இடங்களிலும்  கவர்னரை தமிழகத்தை விட்டு வெளியேறுமாறு  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன.

திமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த  சுவரொட்டிளில், “தமிழ்நாட்டில் அத்து மீறும் அளுநர்,  அவரை காப்பாற்றும்  அதிமுக-பாஜக   கள்ள கூட்டணி GET OUT RAVI”

ஆட்டுக்கு தாடி எதற்கு?  நாட்டுக்கு  கவர்னர் எதற்கு?   GET OUT  RAVI என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.

error: Content is protected !!