Skip to content

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு

புவிசார் குறியீடு அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி இன்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  அவர்   கூறியதாவது:

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் உள்ளிட்ட காவேரி படுகைகளில் மட்டுமே விளையக்கூடிய கும்பகோணம் வெற்றிலை – இதே போல் அரபிக்கடலும் வங்ககடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே செய்யக்கூடிய தோவாளை மாணிக்க மாலை ஆகிய இரண்டு பொருளுக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 62 புவிசார் குறியீடு பொருட்கள் பெறப்பட்டு இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் தமிழகம் விளங்கி வருகிறது. இதே போல் தமிழகத்தில் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று மாநிலத்தில் முதல் மாவட்டமாக தஞ்சை விளங்குகிறது.  தஞ்சை மாவட்டத்தில் தலையாட்டி பொம்மை, திருபுவனம் பட்டு, நெட்டிமாலை உள்ளிட்ட பத்து பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுள்ள நிலையில், மாவட்டத்தில் முதல் முறையாக வேளாண் பொருளுக்கு புவிசார் குறியீடு பெறுவது இதுவே முதல்முறை என தெரிவித்தார்.

error: Content is protected !!