ஒன்றிய அரசு பொது சிவில் சட்டம் கொண்டு வர உள்ளது. இந்த நிலையில் இதற்காக கருத்துக் கேட்டுபும்
நடைபெறுகின்றது. இதற்காக ஒரு பிரத்தியோக இணைய தளம் ஏற்படுத்தப்பட்டுள்து. இதன் மூலம் பொதுமக்கள் பொது சிவில் சட்டம் தேவையா என்பதை பதிவு செய்து வருகின்றனர் .அதன் ஒரு பகுதியாக அரவக்குறிச்சியை அடுத்த
பள்ளப்பட்டி ஐக்கிய ஜமாஅத் மற்றும் ஜமாஅத்துல் உலமாவின் சார்பில், பொது சிவில் சட்டம் பற்றிய பொதுமக்களின் கருத்துக்களை செல்ஃபோன் மூலமாக பதிவு செய்யும் நிகழ்சி நடைபெற்றது. இதற்காக ஷா நகரில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பெண்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் தங்கள் கருத்துக்களை செல்ஃபோன் மூலமாக பதிவு செய்தனர்.
இதுகுறித்து கரூர் மாவட்ட ஜமாத்துல் உலமா பொருளாளர், அல்தாஃப் உசேன் கூறுகையில்: பொது சிவில் சட்டம் குறித்த கருத்து
தெரிவிக்க சிறப்பு முகாம் ஏற்பாடு செய்து மூன்று நாட்கள் பொது மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது இதில் பெரும்பாலான பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கருத்து கேட்பு பொதுமக்களிடம் மிகவும் வரவேற்பு பெற்றுள்ளது அதேபோல விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம் அல்லாத மக்களும் பொதுமக்களும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர் நாள் ஒன்றுக்கு 1000 மேற்பட்ட பொதுமக்கள் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர் என்றார்.