உலக மகளிர் தினத்தையொட்டி இன்று வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் அவர் இந்த தகவலை பதிவிட்டு உள்ளார். இது தொடர்பாக இல்லத்தரசிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். அதே நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினம் வந்துகொண்டு தான் இருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் ஏன் பிரதமர் ரூ.100 குறைக்கிறார் என்றால் தேர்தல் வந்து விட்டதால் பயத்தில் இந்த நடவடிக்கை எடுத்து உள்ளார் என பெண்கள் குறிப்பிட்டனர். தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 950க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று முதல் அது850 ஆக குறைகிறது.