சமையலறையில் காய்கறிகளுக்கு அடுத்தபடியாக முக்கிய இடம் பிடிப்பது பூண்டுதான். இந்நிலையில் இந்த பூண்டின் விலை உயர்வால் பொதுமக்கள் தங்கள் பயன்பாட்டில் தேவையை குறைத்து பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று பூண்டு பயன்படுத்தாத குழம்பே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பூண்டின் தேவை உள்ளது. மருத்துவ குணம் வாய்ந்த பூண்டின் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சை உழவர் சந்தையில் தக்காளி கிலோ 28 ரூபாய்க்கும், கத்தரி 50 முதல் 80 ரூபாய் வரையிலும், வெண்டைக்காய் 60
ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 50 ரூபாய்க்கும் விற்பனையானது. மழை மற்றும் பனிக்காலம் என்பதால் காய்கறிகளின் விலை அதிகம் இருக்கிறது. இருப்பினும் பூண்டின் விலை உயர்வுதான் குடும்பத் தலைவிகளை வேதனைகுள்ளாக்கியுள்ளது. நாட்டு பூண்டு விலை கிலோ ரூ260க்கும், சைனா பூண்டு கிலோ 340க்கும் விற்பனை செய்யப்படுகிறது.