1999 ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் எதிரிகள் நால்வரை நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தி, தானும் வீரமரணமடைந்து, பாட்டாலிக்கின் கதாநாயகன் என்று பாராட்டப்பட்டு, வீர்சக்ரா விருது பெற்ற திருச்சி மேஜர் சரவணனின் 24 ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது., இதையொட்டி அவரது நினைவு தூணில் இன்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே உள்ள அவரது நினைவுத் தூணில் உள்ள உருவப்படத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். மேயர் அன்பழகன், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், திருச்சி போலீஸ் கமிஷனர் சத்யப்பிரியா, என்சிசி மாணவர்கள், திருச்சி பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். மேஜர் சரவணனின் சகோதரி டாக்டர் சித்ரா மற்றும் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் செந்தில்குமார் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.