மயிலாடுதுறை மாவட்டஆட்சியர் ஒருசில தினங்களுக்கு முன்பு நகரில் மகாதானத்தெருவில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் சோதனை செய்தபோது பயிலை தரம் பிரிக்காமலும் மக்கும் குப்பை மக்காத குப்பை என அனைத்தும் ஒன்றாக கொட்டி வைத்திருந்தது தெரிய வந்தது. உடனடியாக அந்த குடியிருப்பு வளாக உரிமையாளருக்கு ரூ.10000 அபராதம் விதிக்கப்பட்டது. இன்று அதே பகுதிக்குச் சென்ற மாவட்டஆட்சியர் மற்றும் நகராட்சி சுகாதார அதிகாரிகள் குடியிருப்பு வாசிகளை அழைத்து மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுவது குறித்து
துப்புறவு தொழிலாளர்களைக் கொண்டு செய்து காட்டினர். மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு வாசிகளை அழைத்து குப்பை மேலாண்மை விழிப்புணர்வு உறுதிமொழியை எடுக்க வைத்தார். குப்பையில்லா நகரமாகவும் குப்பைகளை தரம்பிரித்து வழங்கவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். நமது நகரத்தை தூய்மையாக நாம்தான் கொள்ளவேண்டும் என்று அறிவுரை வழங்கினர்