தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தியின் 77 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் சார்பாக தேசப்பிதா மகாத்மா காந்தி சிலைக்கும், பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் A.அமானுல்லா தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் முன்னாள் நகர் மன்ற உறுப்பினரும் எஸ் எம் சந்திரசேகர் காமராஜர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட பொது செயலாளர் பால.சிவக்குமார், நகரத் துணைத் தலைவர் பொன். முத்துக்குமரன், 5வது வார்டு தலைவர் குணசேகர் மற்றும் தேசியத் தோழர்கள் கலந்து கொண்டனர். நகர காங்கிரஸ் பொருளாளர்
K.சங்கர் நன்றியுரை கூறினார்.
