திருச்சி சுங்கத்துறை ஆணையரக அதிகாரிகள் பல்வேறு இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில் கைப்பற்றப்பட்ட 300 கிலோ கஞ்சா மற்றும் 95 பெட்டி சிகரெட்டுகளை அழிக்க சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனை அரியலூர் தாமரைக்குளத்தில் உள்ள
டால்மியா சிமெண்ட் ஆலை கிலனில் எரிக்க அனுமதி பெற்றனர். இங்கு எரிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுக்க முடியும் என்பதற்காக இந்த இடத்தை தேர்வு செய்தனர். அதன்படி சுங்கத்துறை அதிகாரி டி.அனில் மேற்பார்வையில் அவற்றை எரித்து அழித்தனர்.