தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பாநாடு காவல் சரக்கத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2024 ம் ஆண்டு வல்லம், ஒரத்தநாடு புதூர் பைபாஸில் போலீசார் வாகன தணிக்கை செய்தபோது சொகுசு காரில் கஞ்சா கடத்தி வந்ததாக திருச்சி சதீஷ்குமார்(23), கேரளாவை சேர்ந்த அபிலாஷ்(33) , தஞ்சை நித்திஷ்(22), திருச்சி லட்சுமணன்(24), பப்ளி என்கிற அருண்குமார் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்களில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளான திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் தஞ்சாவூர் சேர்ந்த நித்திஷ் , ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தை கைது செய்ய தஞ்சை எஸ்.பி. ராஜாராம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார். அதன் பேரில் இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.