தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட 3 பட இந்தி டப்பிங் உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திடம் ரூ.6 கோடிக்கு Fuel technologies வாங்கியிருந்தது. 2 படங்கள் தயாரிக்காததால் ரூ.5 கோடியை நிறுவனத்துக்கு திருப்பி தந்த நிலையில், மீதம் உள்ள ரூ.1.6 கோடி தரவில்லை.Fuel technologies நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய ரூ. 1.60 கோடி பணத்தை டெபாசிட் செய்யாமல் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது என அந்த நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட் ரூ.1.6 கோடியை ஐகோர்ட் தலைமை பதிவாளா பெயரில் டெபாசிட் செய்யவும், அதன் பிறகு படத்தை திரையிடவும் உத்தரவிட்டது.
வரும் 14ம் தேதி திரைக்கு வர உள்ள கங்குவா படத்திற்கு 14ம் தேதி சிறப்பு காட்சி ஒளிபரப்பவும் ஐகோர்ட் அனுமதி வழங்கி உள்ளது.