கோவை பன்னிமடை அருகே திப்பனூர் கிராமம் மலை அடிவாரத்தில் அமைந்து உள்ளது. கடந்த திங்கட்கிழமை இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டு வாசலில் ஒற்றை காட்டு யானை வந்து நின்றதை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கணேஷா_போ சாமி என கையெடுத்து கும்பிட்டனர். சிறிது நேரம் வீட்டு வாசலில் நின்று பார்த்த யானை பின்னர் அங்கு இருந்து வனப் பகுதிக்குள் சென்றது. இந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.