ம.தி.மு.க.,வைச் சேர்ந்த கணேசமூர்த்தி, ஈரோடு தொகுதி எம்.பி.,யாக உள்ளார். கூட்டணி பேச்சுவார்த்தையின் போது இந்த முறை ஈரோடு தொகுதியை தி.மு.க., விற்கும் மதிமுகவிற்கு திருச்சியும் வழங்கப்பட்டது. தனக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் கணேசமூர்த்தி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 24ம் தேதி வீட்டில் இருந்த தென்னைக்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். உடல்நலன் பாதிக்கப்பட்ட அவர், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை 5 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.