அண்ணல் காந்தியின் 76வது நினைவு தினம் மற்றும் தியாகிகள் தினத்தை முன்னிட்டு
அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவையின் சார்பில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் உள்ள பூங்காவில் மகாத்மாகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தலைவர் ந. தினகரன், மற்றும் நிர்வாகிகள் பேராசிரியர் விஸ்வநானத், பழனியப்பன், பிஎஸ்கே. கருப்பையா, எஸ். ஆரோக்கியசாமி, எஸ்.பி. ராணி, சித்ராதேவி, ஜெயா உள்பட பலர் பங்கேற்றனர்.