மக்களிடம் நேர்மை விழிப்புணர்வை ஏற்படுத்த 24 வது ஆண்டாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் ஆளில்லா கடை திறப்பு, விற்பனை தஞ்சை மாவட்டம் பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில் பாபநாசம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடந்தது. ஒரு நாள் மட்டும் செயல் படும் இந்த கடையில் ரூ 15,000 மதிப்பில் பிஸ்கட், கடலை மிட்டாய், பிளாஸ்டிக் ஸ்டூல், குப்பை கூடை, பேஸ்ட், சோப், பிளாஸ்டிக் மக் உள்ளிட்ட வீட்டிற்குத் தேவையானப் பொருட்கள் வைக்கப் பட்டிருந்தன.
அதன் மீது ஒட்டப் பட்டிருந்த விலையைப் பார்த்து, மக்கள் உரிய பணத்தை, அங்கு வைக்கப் பட்டிருந்த பெட்டியில் போட்டு விட்டுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். டிஸ்டிரிக்ட் செகரட்டரியேட் அட்வைசர் ரமேஷ் பாபு ஆள் இல்லா கடையை திறந்து வைத்தார். பாபநாசம் டி.எஸ்.பி பூரணி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். ரோட்டரி உதவி ஆளுநர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
இதில் ரோட்டரிச் சங்க பொருளாளர் ரவிச் சந்திரன், முன்னாள் தலைவர்கள் செந்தில் நாதன், அன்பு சீனிவாசன், சரவணன், சேவியர், கோவிந்தராஜ், ராஜேந்திரன், ஜெயசேகர், முருகானந்தம், அறிவழகன், பக்ருதீன், சுப்ரமண்யன் உட்பட பலர் கலந்து கொண்டனர். செயலாளர் முருகவேலு நன்றி கூறினார். இந்தத் தொகை சேவை திட்டத்திற்கு பயன்படுத்தப் படும் என ரோட்டரித் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.