பிரேசிலில் சினாப் சிட்டி என்ற இடத்தில் உள்ள கிளப்பில் பில்லியர்ட்ஸ் விளையாட்டில் ஒலிவரா என்பவர் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளார். இந்த விளையாட்டினை அங்கிருந்த பார்வையாளர்கள் அவரை பார்த்து சிரித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒலிவரா என்பவர் தனது நண்பருடன் வந்து கிளப்பில் இருந்த 7 பேரை சுட்டுக்கொன்றுள்ளார். இதில் 12 வயது சிறுமி உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
