கோவை அவிநாசி சாலை பீளமேடு பகுதியில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் அலுவலகத்தில் 2″வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
எட்டுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வருமான வரித்துறை சோதனையில் வேறு மாநிலத்தைச் சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவை பீளமேடு ஜி ஸ்கொயர் மண்டல அலுவலகத்தில் இரண்டு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இரண்டிலும் இரண்டாவது நாளாக 8 வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று இரண்டாவது நாளாக தொடரக்கூடிய சோதனை இன்று மாலைக்குள் முடிவடையுமா அல்லது தொடர்ந்து நடைபெறுமா என்பது வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையை பொறுத்தே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.